பெண்கள் (#11392)

உமக்காக  ஏங்குவோர் அனைவரின் ஆராதனையின் இலக்காக இருக்கும் வதனத்திற்கு உரியவரே, உமது திருவிருப்பத்- தின்பால் முழுமையான பக்திகொண்டோரின் நம்பிக்கையாக விளங்கும் முன்னிலைக்கு உரியவரே; உமது அரசவையை நெருங்கிய அனைவரின் ஆவலாக இருக்கும் அண்மைக்கு உரியவரே; உமது  உண்மையை அறிந்தோரின் தோழனாக இருக்கும் திருவதனத்திற்கு உரியவரே; உமது  திருமுகத்தைக் கண்ணுற ஏங்கிடும் ஆன்மாக்களை இயக்கிடும் நாமத்திற்கு உரியவரே; உம்மை நேசிப்போரின் உண்மை வாழ்வாக இருக்கும் குரலுக்கு உரியவரே; விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவருக்கும் உயிர் நீராக இருக்கின்ற வார்த்தைகளை மொழிந்திடும் வாயுக்கு உரியவரே!

நீர் அநுபவித்த தவற்றினாலும், தீமை இழைத்திடும் சைனியங்கள் உம் மீது சுமத்திய கொடுமைகளினாலும், உம்மை  அல்லாது வேறெதனையும் சார்ந்துள்ளவற்றிலிருந்து என்னைப் புனிதப்படுத்தக் கூடியவற்றை, உமது கருணை எனும் மேகங்களிலிருந்து என் மீது பொழிந்திடுமாறு நான் உம்மிடம் வேண்டுகிறேன்; அதனால் நான், உம்மைப் போற்றுவதற்குத் தகுதியுடையவனாகவும், உம்மை நேசிப்பதற்குப் பொருத்தமானவனாகவும்  ஆகிடக் கூடும்.

என் பிரபுவே,  உம்மைச்  சுற்றி வலம் வந்திடும்  பணிப்பெண்களுக்கென,    உமது அழகெனும் சூரியனின் பேரொளிகளும்,  உமது  வதனத்தின் பிரகாச ஒளிபிம்பங்களும் இடைவிடாது  பொழியப்படுகின்றனவே, அவர்களுக்காக   நீர் விதித்தருளியவற்றை எனக்கும் தரமறுத்திடாதீர். உம்மை நாடிய எவரொருவருக்கும் நித்திய காலமும் உதவியவரும், உம்மிடம் கேட்போருக்குத் தாராளமாக ஆதரவளித்தவரும் நீரே ஆவீர்.

வலியவரும், என்றும் நிலைத்திருப்பவரும், சர்வ கொடையாளரும், அதி தாராளமானவருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.

-Bahá'u'lláh
-----------------------

பெண்கள் (#11393)

என் கடவுளே, ஒளி உமக்கே உரியதாகுக!  உந்தன்   வதனத்தை நோக்கியே  என் வதனம் செலுத்தப்பட்டுள்ளது; மெய்யாகவே, உந்தன்  வதனமே எனது  வதனமாகும், உந்தன் அழைப்பே எனது அழைப்பாகும், உந்தன்   திருவெளிப்பாடே எனது  திருவெளிப்பாடாகும், உந்தன் உள்ளமையே, எனது  உள்ளமையாகும்; உந்தன் சமயமே எனது சமயமாகும், உந்தன் கட்டளையே எனது  கட்டளையாகும், உந்தன் உயிருருவே எனது  உயிருருவாகும், உந்தன் மாட்சிமையே,  எனது மாட்சிமையாகும், உந்தன்  புகழொளியே எனது  புகழொளியாகும், உந்தன் சக்தியே, எனது சக்தியாகும். 

உந்தன் கற்புடைமை எனும் கூடாரத்தினுள் உமது பணிப்பெண்களைப் பாதுகாத்து, உந்தன் நாள்களுக்குத் தகுதியற்றவையான அவர்களின் செயல்களை இரத்து செய்யுமாறு, நாடுகளின்  அமைப்பாளரும், நித்தியத்தின் மன்னருமாகிய உம்மிடம் நான்  மன்றாடுகிறேன். எனவே, என் கடவுளே, அவர்களிடமிருந்து எல்லா சந்தேகங்-களையும், வீண் கற்பனைகளையும் அகற்றி; நாமங்களின் பிரபுவும், வாய்ச்சொல்லின் மூலமுமானவரே, உம்முடனான அவர்களின் உறவுக்குப் பொருந்தாத அனைத்திலிருந்தும் அவர்களைப் புனிதப்படுத்துவீராக. படைப்பு முழுவதன் அதிகாரத்தை உந்தன்  கைப்பிடிக்குள் வைத்திருப்பவர் நீரே ஆவீர்.

சர்வ வல்லவரும், அதி மேலானவரும், சர்வ ஒளிமயமானவரும், சுய ஜீவியருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.

-Bahá'u'lláh
-----------------------

பெண்கள் (#11394)

பிரபுவே எனதாண்டவரே, நீர் போற்றப்படுவீராக! 

உமது ஒற்றுமையை அறிந்தோரின் இதயங்களைச் சுடர்விட்டு எரியச் செய்திட்ட அன்பெனும் அக்கினிக்கு  உரியவரும்,  உமது திருவதனத்தின் பேரொளிகள், உமது அரசவையை நெருங்கிச் சென்றோரின் வதனங்களைப் பிரகாசிக்கச் செய்திட்டவரும் நீரே ஆவீர். என் கடவுளே, உமது அறிவெனும் ஓடை எத்துணை வளமானது! எனதன்பரே, உம்மீதுள்ள என் அன்பிற்காகவும், உம்பாலான நல்விருப்பம் காரணமாகவும், தீமை இழைப்போர் அம்புகளிலிருந்து நான் அனுபவிக்கும் வேதனை எத்துணை இனிமையானது! உமது பாதையிலும், உமது சமயத்தைப் பிரகடனம் செய்வதிலும் இறை நம்பிக்கையற்றோரின் வாள்களிலிருந்து நான் தாங்கிக்கொண்ட காயங்கள் எத்துணை இன்பமானவை! 

அமைதியின்மையைச் சாந்தமாகவும், அச்சத்தை மனவுறுதியாகவும், வலுவின்மையை்ப்  பலமாகவும், அவமானத்தைப் புகழாகவும், மாற்றியுள்ள உமது நாமத்தினால், வரம்புமீறியோர்களின் தாக்குதல்-களோ, நம்பிக்கையற்றோரின் கடுங்கோபமோ எங்களை அசைத்திடாத விதத்தில், உமது கிருபையைக் கொண்டு, நீர் என்னையும் உமது ஊழியர்களையும், உமது நாமத்தை மேன்மைப்படுத்திடவும், உமது செய்தியை வழங்கிடவும், உமது சமயத்தைப் பறைசாற்றிடவும் உதவிடுமாறு, என் அதிநேசரான உம்மிடம் நான் மன்றாடுகிறேன்.

என் பிரபுவே, உமது அழைப்புக்குச் செவிசாய்த்திட்ட, உம்மை நோக்கி விரைந்திட்ட, தன்னிடமிருந்தே தப்பிச் சென்ற, தனது இதயத்தை உம்மீது இளைப்பாறச் செய்திட்ட உமது  பணிப்பெண் நானாவேன். என் பிரபுவே, உலகின் எல்லாச் செல்வங்களையும் வெளிக்கொணரச் செய்திட்ட உமது நாமத்தினால், உம்மீது நம்பிக்கை வைக்காது, உமது உண்மையை மறுத்திட்டோரின் சைகைகளிலிருந்து என்னைப் பாதுகாக்குமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

நீர் விரும்பியதைச் செய்வதற்கு   சக்திப்-படைத்தவர் நீரே. மெய்யாகவே, அனைத்தையும் அறிந்தவரும், சர்வ விவேகியும் நீரே ஆவீர்.

-Bahá'u'lláh
-----------------------

பெண்கள் (#11395)

பிரபுவே, எனதாண்டவரே, உந்தன் நாமம் மேன்மைப்படுத்தப்படுமாக! 

உமது கருணையின் அற்புதங்களைப் பார்த்திட என் கண்கள் எதிர்பார்த்திருப்பதையும், உமது இனிய கீதங்களைச் செவிமடுக்க என் செவிகள் ஏங்கிக் கொண்டிருப்பதையும், உமது அறிவெனும் உயிர் நீர்களுக்காக என் இதயம் ஆவல்கொண்டிருப்பதையும் காண்பீராக. என் கடவுளே, உமது பணிப்பெண், உந்தன் கருணை எனும் வாசஸ்தலத்தின் முன் நின்று- கொண்டிருப்பதையும், மற்றெல்லா  நாமங்களுக்கும் மேலானதாகத் தேர்ந்தெடுத்து, நீர் விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்திற்கும் மேலாக அமைத்துள்ள, உந்தன் நாமத்தைக் கொண்டு உம்மை அழைப்பதையும், நீர் காண்கின்றீர்.  உமது கருணை எனும் சுவாசங்களை அவள் மீது பொழிந்திடுவீராக; அதனால் அவள், பரவசத்தால் தன்னிடமிருந்தே முழுமையாக விலகிச் சென்றும்,  உமது வதனத்தின் ஒளியால் பிரகாசித்தும், உந்தன் அரசாட்சியின் கதிரொளியைத்  திசையெங்கும் பொழிந்தும், உந்தன் அரியாசனத்தின் மீது ஸ்தாபித்துமுள்ள, அந்த இருக்கையை  நோக்கி முழுமையாக ஈர்க்கப்படக்கூடும்.

என் பிரபுவே, உம்மை நாடிவந்தோரை வெளியேற்றி விடாதீர் எனவும், உம்மை நோக்கி அவர்களின் காலடிகளை எடுத்துவைத்தோரைத் துரத்தி விடாதீர் எனவும், உம்மை நேசிப்போர் அனைவரையும் உமது  கிருபையை இழக்கச் செய்திடாதீர் எனவும், நான் உம்மிடம்  கெஞ்சிக் கேட்கிறேன். என் பிரபுவே, அதி பரிவுடையவரான, கருணைக் கடவுள் என உம்மையே அழைத்துக்கொண்டவர்  நீரே ஆவீர். ஆதலால், உமது புகலிடத்தை நாடி வந்துள்ள, உம்மை  நோக்கித் தனது முகத்தைத் திருப்பியுமுள்ள உமது பணிப்பெண்ணின் மீது இரக்கங் காட்டுவீராக.

மெய்யாகவே, என்றென்றும் மன்னிப்பவரும், அதி கருணையாளரும் நீரே ஆவீர்.

-Bahá'u'lláh
-----------------------

பெண்கள் (#11396)

எவரது அச்சுறுத்தும் மாட்சிமை முன் யாவும் நடுங்கி நிற்கின்றனவோ, எவரது பிடிக்குள் மனிதர்கள் அனைவரின் காரியங்களும் அடங்கியுள்ளனவோ, எவரது கிருபை, கருணை ஆகியவற்றின்பால்,  உயிரினங்கள் அனைத்தின் வதனங்களும் நோக்கியவாறு உள்ளனவோ, இவையனைத்துக்கும் உரியவர் நீரே! நாமங்கள் எனும் இராஜ்யத்தினுள் உள்ள அனைத்து நாமங்களின் ஆற்றலாகிட நீர் விதித்திட்ட உமது திருநாமத்தினால், உமது நாமங்கள் எனும் இராஜ்யத்தை நடுங்கச் செய்திட்ட இந்த திருவெளிப்பாட்டில், உம்மிடமிருந்து திரும்பியோடியோரிடமிருந்து, உமது அதி மாண்புமிக்க, அதி உயர்வுமிக்க தான் எனும் தன்மையின் உண்மையை மறுத்திட்டோரின் முணுமுணுப்புக்களிலிருந்தும் எங்களைப் பாதுகாக்கும்படி நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

   என் பிரபுவே, நான் உமது பணிப்பெண்களுள் ஒருத்தியாவேன்! உமது  கருணைமிக்க அருட்கொடையின் சரணாலயத்தை நோக்கியும், உமது  ஒளியினால் போற்றப்படும் திருக்கூடாரத்தை நோக்கியும் நான்  என்  முகத்தைத்   திருப்பியுள்ளேன். உம்மைச்  சார்ந்திராத அனைத்திலிருந்தும் என்னை தூய்மைப்படுத்துவீராக; உம்மை நேசிக்கவும், உமது விருப்பத்தை நிறைவேற்றவும் என்னைப் பலப்படுத்துவீராக; அதனால் உமது அழகினை நினைப்பதிலேயே நான் என்னை மகிழ்வுபெறச் செய்தும், உமது உயிரினங்கள் அனைத்தின்  மீதுள்ள எல்லாப் பற்றுகளையும் துறந்திடக் கூடுமாக; மேலும், ஒவ்வொரு கணமும் “உலகங்களுக்கெல்லாம் பிரபுவான இறைவன், மேன்மைப்படுத்தப்படுவாராக!” என, ஒவ்வொரு கணமும், பிரகடனம்  செய்திடக் கூடுமாக.

என் பிரபுவே, உமது  அழகு எனது உணவாகிடவும், உமது  முன்னிலையின் ஒளி எனது பானமாகிடவும், உமது இன்பம் எனது நம்பிக்கையாகிடவும், உம்மைப்  போற்றுவதே எனது வேலையாகிடவும், உமது நினைவே எனது தோழனாகவும், உமது இறையாண்மையே எனது உதவியாகவும், உமது வாசஸ்தலமே எனது இருப்பிடமாகவும், உம்மிடமிருந்து ஒரு திரையைப்போன்று மறைக்கப்பட்டோரின் வரம்புகளுக்கு மேலாகத் நீர்  உயர்த்தியுள்ள இருக்கையையே எனது இல்லமாக ஆக்கிடுவீராக.

உண்மையாகவே, நீரே சக்தி, வலிமை, பேரொளி ஆகிய இறைவனாவீர்.

-Bahá'u'lláh
-----------------------

பெண்கள் (#11397)

என் கடவுளே, ஒளி உமக்கே உரியதாகுக! உம்  மீதும் உமது அடையாளங்களின் மீதும் நம்பிக்கைக் கொண்டுள்ள உமது பணிப்பெண்களுள் ஒருத்தி, உமது ஒருமைத்தன்மை எனும் விருட்சத்தின் நிழலின் கீழ் நுழைந்துள்ளாள். என் கடவுளே, தெளிவானதும் மறைவானதுமான உமது நாமத்தின் பேரில், அவளைத் உமது தேர்வுச் செய்யப்பட்ட நனிசிறந்த மதுரசத்தினைப் பருகச் செய்வீராக. அதனால் அது அவள் தன்னையே மறக்கச் செய்தும், உமது நினைவிலேயே அவள் தன்னை முழுமையாகப் பக்திகொள்ளவும், உம்மைத் தவிர வேறெவரிடமிருந்தும் முற்றிலும் பற்றற்-றிருக்கவும் கூடும்.

என் பிரபுவே, உம்மைப் பற்றிய அறிவை இப்போது நீர் அவளிடம் வெளிப்படுத்தியுள்ளதால், உமது அருட்கொடையினால், உமது கிருபையை அவளுக்குத் தரமறுத்திடாதீர்; இப்போது அவளை  உம்மிடமே நீர் அழைத்துள்ளதால், உமது தயையின் வாயிலாக, உம்மிடமிருந்து அவளைத் துரத்தி விடாதீர்.  ஆதலால், உமது உலகினில் காணப்படும் அனைத்தையும் விடச் சிறந்தவற்றை அவளுக்குத் தந்தருள்வீராக.  மெய்யாகவே, அதி வள்ளன்மை-யாளரும், மகத்தான கிருபையாளரும் நீரே ஆவீர்.   

மண்ணுலகு விண்ணுலகு ஆகிய இராஜ்யங்களுக்குச் சமமானவற்றைத் உந்தன்  உயிரினங்கள் ஒன்றுக்கு நீர் தந்தருளியபோதும், அது உந்தன் அரசாட்சியின் பிரம்மாண்டமான அளவிலிருந்து ஓர் அணுவைக் கூடக்  குறைத்திடவியலாது. மாபெரும் திருவுரு என மனிதர்கள் உம்மை அழைத்திட விரும்பும் ஒருவரை விடத் நீர் மிக மிக மகத்தானவர். ஏனெனில், அத்தகைய பட்டப் பெயர் என்பதோ, உந்தன் திருவிருப்பத்தின் சாதாரண குறிப்பினால் உருவாக்கப்பட்ட உமது அனைத்து நாமங்களுள் ஒன்றாகும்.

சக்திமிக்கக் கடவுளும், ஒளிமிக்கக் கடவுளும், அறிவும் விவேகமுமிக்கக் கடவுளுமாகிய உம்மைத்  தவிர வேறு கடவுள் இலர்.

-Bahá'u'lláh
-----------------------

பெண்கள் (#11398)

என் கடவுளே, உம்மை மறுத்து விலகிய உமது உயிரினங்கள் இழைத்திட்ட தவறுகள், எவருள் உமது  தெய்வத்தன்மை அவதரித்துள்ளதோ அவருக்கும், உமது ஊழியர்களுக்கும் இடையே எவ்வாறு தடையை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீர் காண்கின்றீர். என் பிரபுவே, ஒருவர் மற்றவரின் நலன்களில் மும்முரமாக ஈடுப்பட செய்திடக்-கூடியவற்றை அவர்களிடம் அனுப்பிடுவீராக. அதனால், அவர்களின் வன்செயல் அவர்களின் எல்லைக்குட்பட்டதாக இருந்திடவும், அவர்கள் வாழும் நாடு அமைதியை காணவும் செய்திடுவீராக.

என் பிரபுவே, உமது பணிப்பெண்களுள் ஒருத்தி, உமது வதனத்தை நாடி, உமது மகிழ்ச்சி எனும் பரவெளியில் உயரப்பறந்துள்ளாள். என் பிரபுவே, உமது பணிப்பெண்லாகத்  தேர்ந்தெடுக்கப்-பட்டோருக்கு  நீர் விதித்தருளியவற்றை  அவளுக்குத் தரமறுத்திடாதீர். ஆகையால்,   உமது  வார்த்ததைகளின்பால் ஈர்த்திட அவளை இயலச் செய்திடுவீராக, அதனால் அவள் அவர்கள் மத்தியில் உமது புகழைப் பாடக்கூடும். 

நீர்  விரும்பியதைச் செய்வதற்குச் சக்தி-யுடையவர் நீரே. சர்வ வல்லவரும், மனிதர் அனைவராலும் உதவிக்கு நாடப்படுபவருமான, உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்

-Bahá'u'lláh
-----------------------

பெண்கள் (#11399)

என் பிரபுவே, என் நேசரே, எனதாவலே! என் தனிமையில் என்னை நேசிப்பீராக; என் நாடுகடத்தலில் என்னுடனிருப்பீராக. எனது துயரத்தைப் போக்குவீராக. உமது அழகின்பால் என்னைப் பக்தி கொள்ளச் செய்வீராக. உம்மைத் தவிர மற்றெல்லாவற்றிலும் இருந்தும் என்னைப் பின்வாங்கச் செய்வீராக. உமது புனிதம் என்னும் நறுமணங்களின் மூலம் என்னை ஈர்த்திடுவீராக. உமது இராஜ்யத்தில் வாழும் உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் தொடர்பறுத்-திட்டோருடனும், உமது புனித வாயிலுக்குச் சேவையாற்ற ஏங்குவோருடனும், உமது சமயத்தில் பணியாற்றிட விரும்புவோருடனும் என்னைத் தொடர்பு கொள்ளச் செய்வீராக. உமது நல்விருப்பத்தினை அடைந்திட்டப் பணிப்-பெண்களுள் ஒருத்தியாக என்னை ஆக்கிடுவீராக. மெய்யாகவே, அருளாளரும், ஈகைக் குணமுடையவரும் நீரே.

-`Abdu'l-Bahá
-----------------------

