பாதுகாப்பு (#11375)

பிரபுவே, என் இறைவா! நீர் போற்றப்படுவீராக. உமது அருள்பாலிப்புகளின் திசையிலல்லாது வேறெங்கும் திரும்பாதிருக்குமாறும் உமது தீர்க்கமான கட்டளைக்கும் மாற்றவியலா நோக்கத்திற்கும் ஏற்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ள உமது தெளிவான நூலில் நீர் கட்டளையிட்டுள்ளதையன்றி வேறெதனையும் கடைப் பிடிக்காதிருக்குமாறே நான் உமது ஊழியர்களை அழைத்தேன் என்பதனை நீர் பார்க்கின்றீர்; அறிகின்றீர். 

என் இறைவா,  உம்மால் அனுமதிக்கப்பட்டாலன்றி நான் எதனையும் கூறவியலாது; உமது ஒப்புதலைப் பெறும்வரை நான் எத் திசையிலும் நகரவியலாது. என்னை உருவாக்கி, உமது வலிமையின் சக்தியினால் உமது சமயத்தை வெளிப்படுத்திட எனக்கு அருளினைப் பொழிந்த எந்தன் இறைவன் நீரே ஆவீர். நான் ஆளாக்கப்பட்ட இன்னல்கள் அத்தகையதானதன் காரணத்தினால் உம்மைப் புகழ்வதிலிருந்தும் உமது ஒளியின் மகிமையை மிகைப்படுத்துவதிலிருந்தும் எனது நா தடுக்கப்பட்டுள்ளது. 

என் இறைவா, உமது கட்டளையின் வழியாகவும் உமது இறைமையின் ஆற்றல் வழியாகவும் நீர் எனக்கு நியமித்தவைக்காகப் புகழெல்லாம் உமக்கே உரியதாகட்டும். என்னையும் என்னை நேசிப்போரையும் உந்தன்பால் எங்களது அன்பில் வலுவுடையோராக்கி, உமது சமயத்தில் எங்களைத் திடப்பற்று உடையவர்களாக இருக்கச் செய்வீராக. என் இறைவா! உமது வலிமையின் மீது ஆணை! உமது ஊழியனின் அவமானம் அவனை உம்மிடமிருந்து திரையிட்டு மறைத்ததுபோல் ஆகிவிடும்; உம்மை அறிந்து கொள்வதே அவனுக்குப் புகழாகும். உந்தன் திருநாமத்தின் சக்தி என் கவசமாகும் போது யாதொரு தீங்கும் என்னைத் தாகவியலாது. உமதன்பு என்னுள்ளத்தில் குடி கொள்ளும்போது, இவ்வுலகின் அணைத்து இன்னல்களும் என்னை ஒரு போதும் கலக்கமடியச் செய்யாது.

ஆகவே, என் பிரபுவே, எது என்னையும் எனது அன்புக்குரியவர்களையும் உமது உண்மையினை மறுத்துள்ளோர், உமது அடையாளங்களை நம்பிட மறுத்தோர் ஆகியோரின் விஷமத்திலிருந்து காத்தருளுமோ அதனை அனுப்பிடுவீராக. 

மெய்யாகவே, நீரே ஒளிமயமானவர், அதி வள்ளன்மை மிகுந்தவர்!

-Bahá'u'lláh
-----------------------

பாதுகாப்பு (#11376)

பிரபுவே, எனதான்டவரே, நீர் போற்றப்படுவீராக! உந்தன் மென்கருணை எனும் மதுரசத்தை, உமது கிருபை எனும் கரங்களிலிருந்து பருகியும், உமது  நாள்களில் உந்தன் அன்பெனும் நறுமணத்தைச் சுவைத்திட்ட இவன், உமது ஊழியனாவான்.  எந்தத் துயரமும்,  உமதன்பில்  மகிழ்வதிலிருந்தோ, உந்தன் வதனத்தைக் கண்ணுறுவதிலிருந்தோ; மற்றும் கவனமின்மை எனும் சைனியங்கள் அனைத்தும் உமது நல்விருப்பம் எனும் பாதையிலிருந்து அவர்களை விலகச் செய்திட சக்தியற்று இருக்கின்றனவோ, அந்த உந்தன்  நாமங்களின் திருவுருவான- வர்களினால், உம்மிடமுள்ள நற்பொருள்களை அவனுக்கு வழங்கியும், இவ்வுலகினை அவன் ஒரு கண்சிமிட்டலை விட விரைவாக மறைந்திடும் ஒரு நிழலாகக் கருதிடும் வகையில், அவனை அத்தகையச் சிகரங்களுக்கு உயர்த்திடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.

என் கடவுளே, உமது அளவிடமுடியாத மாட்சிமையின் சக்தியைக் கொண்டு, நீர் வெறுத்திடும் அனைத்திலிருந்தும் அவனைப் பாதுகாப்பாக வைத்திடுவீராக. மெய்யாகவே, நீரே அவனது பிரபுவும், எல்லா உலகங்களின் பிரபுவும் ஆவீர்.

-Bahá'u'lláh
-----------------------

பாதுகாப்பு (#11377)

பிரபுவே, எனதாண்டவரே, உந்தன் நாமம் போற்றப்டுவமாக! எதன் மூலமாக அந்நேரம் வந்ததோ, மீண்டும் உயிர்த்தெழுதல் நிகழ்ந்ததோ, விண்ணிலும் மண்ணிலுமுள்ளோர் யாவரையும் பயமும் நடுக்கமும் பற்றிக் கொண்டதோ, அந்த உமது திருநாமத்தின் பெயரால்,  உம்பால் திரும்பியும், உமது சமயத்திற்கு உதவிட்ட உமது 

ஊழியர்களின் இதயங்களைப் பரவசமடையக்-கூடியவை எவையோ அவற்றை,  உமது இரக்கம் எனும் சுவர்க்கத்திலிருந்தும், உமது மென் கருணையெனும் மேகங்களிளிருந்தும், பொழிந்தருளுமாறு உம்மைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். 

என் பிரபுவே, உமது ஊழியர்களையும், உமது பணிப்பெண்களையும் பயனற்ற எண்ணங்கள், வீண் கற்பனைகள் என்னும் ஏவு கணைகளிலிருந்து பாதுகாத்து, உமது அருள் என்னும் கரங்களிலிருந்து மென்மையாக வழிந்திடும் உமது அறிவெனும் நீரினைப் பருகச் செய்வீராக. 

நீர், உண்மையாகவே, எல்லாம் வல்லவர், அதி மேன்மைப்படுத்தப்பட்டவர், என்றும் மன்னித்-தருள்பவர், அதி கருணையாளர்.

-Bahá'u'lláh
-----------------------

பாதுகாப்பு (#11378)

கடவுளே, என் கடவுளே! நான் உமது அன்பெனும் கயிற்றினை இறுகப் பற்றி, என்னை உமது பொறுப்பிலும் பாதுகாப்பிலும் முழுமையாக ஒப்படைத்து, என் இல்லம் நீங்கி வெளியில் செல்கிறேன். சொற்கேளாத, கட்டுமீறித்தனமாய் நடந்திடும் முரண்பாடுடைய கொடியோனிட-மிருந்தும், உம்மிலிருந்து வெகுதூரம் விலகித் திசை தவறிப் போன தீங்கிழைப்போரிடமிருந்தும் உமது நேசர்களை, உமது வள்ளன்மையினாலும் கிருபையினாலும் பாதுகாக்குமாறு பரிந்து கேட்கின்றேன். பிறகு என் இல்லம் திரும்பவும் உமது ஆற்றலாலும் வலிமையாலும் எனக்குச் சக்தியளிப்பீராக. உண்மையாகவே, நீரே, எல்லாம் வல்லவர், ஆபத்தில் உதவுபவர், சுயஜீவியானவர்.

-Bahá'u'lláh
-----------------------

பாதுகாப்பு (#11379)

மேன்மையான, அதி உயரிய, அதி விழுமிய அவரது திருநாமத்தின் பேரால்! 

பிரபுவே, எனதாண்டவரே நீர் போற்றப்படுவீராக! எனது கடவுளும், எனது பிரபுவும், எனது ஆண்டவரும், எனது ஆதரவும், எனது நம்பிக்கையும், எனது புகலிடமும், எனது ஒளியும் ஆனவரே. மறைவாயுள்ள, மதிப்பிற்குரிய உம் ஒருவரை அல்லாது வேறெவருமே அறிந்திராத உமது திருநாமத்தின் பேரால், இந் நிருபத்தினை ஏந்தி வருபவரை ஒவ்வொரு பேரிடரிலிருந்தும் கொள்ளை நோயிலிருந்தும், கொடிய ஆண், பெண் ஒவ்வொருவரிடமிருந்தும், தீமையிழைப் போனின் தீங்கிலிருந்தும், சமய நம்பிக்கை அற்றோரின் சூழ்ச்சியிலிருந்தும் பாதுகாக்குமாறு உம்மிடம் கேட்டுக் கொள்கின்றேன். மேலும், அனைத்துப் பொருள்களின் மீதுமான அதிகாரத்தினை உமது கையில் வைத்துள்ள என் இறைவா, ஒவ்வொரு நோவிலிருந்தும் மன வேதனையிலிருந்தும், அவரைப் பாதுகாப்பீராக. உண்மையிலேயே, நீரே, பொருள்கள் அனைத்தின் மீதும் சக்தி கொண்டுள்ளவர். நீர் திருவுளங் கொண்டதற்கேற்ப ஆணையிடுகின்றீர்; விரும்பியவாறு விதித்திடுகின்றீர்.  

மன்னருக்கெல்லாம் மன்னரே! அன்புள்ள பிரபுவே! புராதன அழகிற்கும் அருளுக்கும்,  தயாளத்திற்கும் ஈகைக்கும், ஊற்றாகியவரே! நோய்களைக் குணப்படுத்துபவரே! தேவை-களுக்குப் போதுமானவரே! ஒளிக்கெல்லாம் ஒளியானவரே! ஒளிக்கெல்லாம் மேலான ஒளியானவரே! ஒவ்வோர் அவதாரத்தையும் வெளிப்படுத்துபவரே! இரக்கக் குணமுடையவரே! கருணை மிக்கவரே! 

அருளாளரே, வள்ளன்மை மிக்கவரே, உமது அதிமிகு கருணை, அபரிமிதமான அருள் ஆகியவற்றின் மூலமாக இந் நிருபத்தினை ஏந்தி வருபவரிடம் கருணை காட்டுவீராக! மேலும், உமது பாதுகாப்பின் வாயிலாக, அவரது உள்ளமும் மனமும் அருவருப்புக் கொண்டிடும் யாவற்றிலிருந்தும் அவரைக் காத்தருள்வீராக. சக்தி அளிக்கப்பட்டோரிடையே, நீர், மெய்யாகவே, அதி சக்தி வாய்ந்தவர். 

உதித்திடும் கதிரவனே, இறைவனின் ஒளி உம் மீது இலயித்திடுமாக! தம்மைத் தவிர கடவுள் வேறெவருமிலர் என எல்லாம் வல்ல, அதி அன்பான, ஆண்டவனே தம்மைக் குறித்து அளித்திட்ட அத்தாட்சிக்கு, நீர் சாட்சியம் அளிப்பீராக.

-Bahá'u'lláh
-----------------------

பாதுகாப்பு (#11386)

துன்பத்திலிருந்து விடுபட விரும்புவீராயின், சர்வ கருணைமிக்கவரின் எழுதுகோலினால் வெளிப்படுத்தப்-பட்டுள்ள இப்பிரார்த்தனையைக் கூறுவீராக:

கடவுளே, என் கடவுளே! உமது ஒற்றுமைக்கும் உமது ஒருமைக்கும் நான் சாட்சியமளிக்கின்றேன். நாமங்களின் உடைமையாளரும் விண்ணுலகங்- களின் அமைப்பாளருமானவரே, உமது மேன்மைமிகு திருவாக்கினுடைய ஊடுருவும் செல்வாக்கு, மற்றும் உமது அதிவிழுமிய எழுதுகோல் சக்தியின் மூலமாக, உமது சக்தி மற்றும் வலிமை எனும் அடையாளங்களைக் கொண்டு எனக்கு உதவி புரியுமாறும், உமது ஒப்பந்தம்,  உமது சாசனம் ஆகியவற்றை மீறியுள்ள உந்தன் எதிரிகளின் விஷமங்களிலிருந்து என்னைப் பாதுகாப்பீராக.  மெய்யாகவே, சர்வவல்லவரும், அதி சக்திமிக்கவரும் நீரே ஆவீர்.

இப்பிரார்த்தனை, தகர்க்கவியலா வலிமைமிகு அரணும், வென்றிடவியலா படையுமாகும். அது பாதுகாப்பை வழங்கி விடுதலையை உறுதி செய்கின்றது.

-Bahá'u'lláh
-----------------------

பாதுகாப்பு (#11380)

என் பிரபுவே, தாய்நூலில் வரையப்பட்டுள்ள, உமது மதிப்பின்படி எங்களுக்கு மிகச் சிறந்ததெனக் கருதப்படுவதை, எனக்கும், உம்மீது நம்பிக்கைக் கொண்டோருக்கும் விதித்திடுவீராக; ஏனெனில், அனைத்துப் பொருள்களின் முன்னரே விதிக்கப்பட்ட அளவுகளை உந்தன் கரத்தின் பிடிக்குள் நீர் வைத்துள்ளீர்.

உமது அன்பை நெஞ்சார வைத்திருப்போரின் மீது உமது நேர்த்தியான பரிசுகள் இடைவிடாது பொழியப்படுகின்றன; உமது தெய்வீக ஒற்றுமையை உணர்ந்தோரின் மீது, உந்தன் விண்ணுலக அருட்கொடைகளின் அற்புதச் சின்னங்கள் தாராளமாக வழங்கப்படுகின்றன.  எங்களுக்கென நீர் விதித்துள்ள அனைத்தையும் நாங்கள் உந்தன் பாதுகாப்பில் வைக்கின்றோம்; உமது அறிவு தழுவிடும் எல்லா நன்மைகளையும் எங்களுக்குத் தந்தருளுமாறு உம்மிடம் மன்றாடுகிறோம்.

என் பிரபுவே, சகலத்தையும் அறிந்திடும் உமது சக்தி உணரக்கூடிய எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பீராக; ஏனெனில், உம்முள் உள்ளவற்றை அன்றி வேறெந்த சக்தியோ பலமோ இல்லை; உமது முன்னிலையிலிருந்து  வரும் வெற்றி அல்லாது வேறெதுவும் வரப்போவதில்லை; மேலும் ஆணையிடுவதற்கான அதிகாரம்  உம் ஒருவருக்கே உரியது. இறைவன் விரும்பிய அனைத்தும் நிகழ்ந்துள்ளன, அவர் விரும்பாத எதுவும் நிகழப்போவதில்லை. 

அதி உயர்வான, அதி வல்லமைமிக்கவரான கடவுளில்  அன்றி  வேறு சக்தியோ பலமோ இல்லை.

-The Báb
-----------------------

பாதுகாப்பு (#11381)

கடவுளே, ஒளி உமக்கே உரியதாகட்டும்! பொருள்கள் அனைத்திற்கும் முன்பாக இருந்துள்ளவரும், பொருள்கள் அனைத்திற்குப் பிறகும், பொருள்கள் அனைத்திற்கு அப்பாலும் நிலைத்திருக்கக் கூடிய  கடவுள் நீரே ஆவீர். எல்லாப் பொருள்களையும் அறிந்து, எல்லாப்  பொருள்களுக்கும் உச்சவுயர்வாக இருக்கும் கடவுள் நீரே ஆவீர். எல்லாப் பொருள்களையும் இரக்கத்தோடு கையாள்பவரும், எல்லாப் பொருள்களுக்கிடையே தீர்ப்பளிப்பவரும், எல்லாப் பொருள்களையும் உந்தன் அகக் காட்சியால் தழுவிடும் கடவுள் நீரே ஆவீர்.  என் பிரபு, நீரே கடவுள்; என் நிலையை நீர்  அறிவீர்; எனது அக, புற ஜீவனை நீர் காண்கின்றீர்.

உந்தன் அழைப்புக் குரலுக்குப் பதிலளித்திட்ட  எனக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் உமது மன்னிப்பை அருள்வீராக. என் மீது துக்கம் விளைவிக்க விரும்பும், அல்லது எனக்குக் கெடுதல் நேரட்டும் என ஆவலுறும் எவரொருவரின் தீங்கினையும் எதிர்த்திடும்  எனது நிறைவான உதவியாளராக  நீர் ஆகிடுவீராக. மெய்யாகவே, எல்லாப் படைப்புப் பொருள்களுக்கும் பிரபு நீரே ஆவீர். அனைவருக்கும் நீரே  நிறைவளிக்கின்றீர், ஆனால் எவருமே உம்மையன்றி   தன்னிறைவாக இருந்திடவியலாது.

-The Báb
-----------------------

பாதுகாப்பு (#11382)

விஞ்சிடும் மாட்சிமைக்கான பிரபுவும், சகல கவர்ச்சிமிக்கவருமான கடவுளின் பெயரால். ஆட்சியதிகாரத்தின் மூலத்தைத் தனது கைக்குள் வைத்திருக்கும் பிரபு, புனிதப்படுத்தப்படுவாராக. “ஆகு” என்றதும் யாவும் உருவாகிடுகின்ற, தமது கட்டளையிடும் வார்த்தையைக் கொண்டு தாம் விரும்பிய அனைத்தையும் அவர் படைக்கின்றார். இதுவரை அதிகாரத்தின் சக்தி அவருடையதாகவே இருந்துவந்துள்ளது, இதற்குப் பிறகும் அது அவருடையதாகவே இருந்துவரும்.  தமது கட்டளையின் சக்தி வாயிலாக, தாம் விரும்பிய எவரையும் அவர் வெற்றிப்பெறச் செய்வார், உண்மையாகவே, அவரே சக்திமிக்கவரும், சர்வ வல்லவரும் ஆவார்.

திருவெளிப்பாடு, படைப்பு மற்றும் அவற்றுக்கு இடையேயுள்ள இராஜ்யங்களின் எல்லா மேன்மையும் மாட்சிமையும் அவருக்கே உரியதாகும். மெய்யாகவே, அவரே ஆற்றல்மிக்கவர், சர்வ ஒளிமயமானவர்.  நித்திய காலம் முதல் வெல்லமுடியாத பலத்திற்கு அவரே தோற்றுவாயாக இருந்துள்ளார், என்றென்றும் இருந்தும் வருவார். உண்மையில், அவரே வலிமைக்கும் சக்திக்குமான பிரபு.  விண்ணும், மண்ணும்,   அவற்றுக்கு இடையேயுள்ள அனைத்து இராஜ்யங்களும் கடவுளுக்கே உரியவையாகும்; அவரது சக்தி, அனைத்திலும் உயர்வானதாகும். பூமி, சொர்க்கம், மற்றும் அவற்றுக்கு இடையேயுள்ள அனைத்துச் செல்வங்களும் அவருடையவையே; அவரது பாதுகாப்பு அனைத்துப் பொருள்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணுலகங்களும் மண்ணுலகும், அவற்றுக்கு இடையேயுமுள்ள அனைத்திற்கும் படைப்பாளர் அவரே; உண்மையாகவே, அவரே அனைத்துப் பொருள்களுக்கும் ஒரு சாட்சியாவார்.  விண்ணுலகங்களிலும்  மண்ணுலகிலும், அவற்றுக்கு இடையேயுமுள்ள அனைத்திலும் வசிக்கும் யாவற்றுக்கும் தீர்ப்பளிக்கும் பிரபு அவரே ஆவார்; உண்மையாகவே, தீர்ப்பளிப்பதில் இறைவன் துரிதமானவர்.  விண்ணுலகங்களிலும்  மண்ணுலகிலும், அவற்றுக்கு இடையேயுமுள்ள அனைத்திற்கும் பங்கிடும் அளவினை அவர் அமைத்திடுவார். மெய்யாகவே, அவரே அதிவுயரிய பாதுகாபாளர். விண்ணுக்கும் மண்ணுக்கும், அவற்றுக்கு இடையேயுமுள்ள அனைத்திற்குமான திறவுகோல்களை அவர் தமது பிடிக்குள் வைத்துள்ளார்.  தமது கட்டளை எனும் சக்தியின் வாயிலாகத், தாம் விரும்பியதற்கு ஏற்றவாறு அவர் பரிசுகளை வழங்கிடுவார். உண்மையில், அவரது கிருபை அனைத்தையும் சூழ்ந்துள்ளது; அவரே சகலமும் அறிந்தவர். 

கூறுவீராக: எனக்கு நிறைவளிப்பவர் கடவுளே ஆவார்; பொருள்கள் அனைத்தின் இராஜ்யங்களையும் தமது பிடிக்குள் வைத்திருப்பவர் அவரேயாவார். விண்ணிலும் மண்ணிலும், அவற்றுக்கு இடையேயுமுள்ள  அவரது சேனைகளின் சக்தி வாயிலாக,  தமது ஊழியர்களுள் தாம் விரும்பிய எவரையும் அவர் உண்மையாகவே பாதுகாத்திடுவார்.  உண்மை-யாகவே, பொருள்கள் அனைத்தையும் கண்காணிப்பவர் கடவுளேயாவார்.

பிரபுவே, அளவிடற்கரிய  உயர்நிலையில்  நீர் இருக்கின்றீர்! எங்களுக்கு முன்னேயும், பின்னேயும், எங்கள் தலைகளுக்கு மேலேயும், எங்கள் வலப்புறத்திலும், இடப்புறத்திலும், எங்கள் பாதங்களுக்குக் கீழேயும், மற்றும் நாங்கள் எதிர்கொள்ளும்  எல்லாப்பக்கங்களிலும் இருப்பவற்றிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பீராக. மெய்யாகவே, எல்லாப் பொருள்களின் மீதும் நீர்  வழங்கிடும் பாதுகாப்பு தவறாததாகும்.*

 

*பாதுகாப்புக்கான இந்தப் பிரார்த்தனையின் அசல், பாப் பெருமானாரின் சொந்த கையெழுத்தில், ஐந்து முனைக் கொண்ட நட்சத்திர வடிவில் எழுதப்பட்டுள்ளது.

-The Báb
-----------------------

பாதுகாப்பு (#11383)

கடவுளே, என் கடவுளே! உமது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஊழியர்களைத் தானெனுந் தன்மை, மனவெழுச்சி ஆகிய தீமைகளிலிருந்து பாதுகாப்பீராக; உமது அன்புக் கருணையெனும் கவனமிக்கக் கண்களைக் கொண்டு குரோதம், வெறுப்பு, பொறாமை ஆகியவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாத்து, உமது கண்காணிப்பு எனும் தகர்க்கவியலாத கோட்டையினுள் அவர்களுக்குப் புகலிடமளிப்பீராக; ஐயமெனும் அம்புகளிலிருந்து அவர்களைக் காத்து உமது ஒளிமிக்க அடையாளங்களின் வெளிப்பாடுகளாக ஆக்குவீராக; உமது தெய்வீக ஒற்றுமை என்னும் பகலூற்றிலிருந்து பாய்ந்திடும் பிரகாசமிக்க கதிர்களைக் கொண்டு அவர்களின் வதனங்களை ஒளிபெறச் செய்வீராக; உமது இராஜ்யத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட பாசுரங்களைக் கொண்டு அவர்களின் உள்ளங்களைக் களிக்கச் செய்வீராக; உமது ஒளி என்னும் அரசிலிருந்து வந்திடும் அனைத்தையும் ஆட்சிபுரிந்திடும் உமது சக்தியினைக் கொண்டு அவர்களின் இடைகளை வலுப்பெறச் செய்வீராக. சர்வ வல்லமை  உடையவரும், பாதுகாப்பவரும், எல்லாம் வல்லவரும், கிருபையாளரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

பாதுகாப்பு (#11384)

என் பிரபுவே! மனிதர்கள் வேதனைகளாலும் பேரிடர்களாலும் சுற்றி வளைக்கப்பட்டிருப்-பதையும் இன்னல்களாலும் துன்பங்களாலும் சூழப்பட்டிருப்பதையும் நீர் அறிவீர். 

ஒவ்வொரு சோதனையும் மனிதனைத் தாக்குகின்றது, ஒவ்வொரு துரதிர்ஷ்டமும் அவனை ஓர் அரவத்தின் தாக்குதலைப் போல் சாடுகின்றது. உமது பாதுகாப்பு, பராமரிப்பு, காவல், கவனிப்பு என்னும் இறக்கையின் கீழல்லாது  அவனுக்குத் தஞ்சமோ புகலிடமோ கிடையாது. 

கருணை மிக்கவரே! என் பிரபுவே! உமது பாதுகாப்பை என் கவசமாகவும், உமது பராமரிப்பை என் கேடயமாகவும், உமது ஒருமை என்னும் வாயிலில் பணிவை என் காவலாகவும், உமது கவனிப்பையும் ஆதரவையும் என் அரணாகவும் உறைவிடமாகவும் ஆக்குவீராக. எனது தான் எனுந் தன்மை, ஆசை ஆகியவற்றின் தூண்டுதல்- களிலிருந்து என்னைப் பாதுகாத்து, என்னை ஒவ்வொரு நோயிலிருந்தும், சோதனையி-லிருந்தும், இடர்ப்பாடிலிருந்தும், கடும் பரீட்சையிலிருந்தும் காத்திடுவீராக. 

மெய்யாகவே, காப்பவரும், பாதுகாவலரும், பராமரிப்பவரும், நிறைவளிப்பவரும் நீரே; மெய்யாகவே, நீரே கருணையாளரிலேயே அதிகருணையாளர்.

-`Abdu'l-Bahá
-----------------------

பாதுகாப்பு (#11385)

இரக்கமும் அன்பும் நிறைந்த ஆண்டவனே! கடலின் முடிவில்லா அலைகளைப்போல கிழக்கு அசைவுற்றுள்ளது, மேற்கு அலை பாய்கின்றது. புனிதமெனும் மெல்லிய இளங்காற்று பரவியுள்ளது, காணவியலா இராஜ்யத்தினின்று, உண்மைச் சூரியனின் கதிர்கள் பிரகாசமாக ஒளிவீசுகின்றன. தெய்வீக ஒற்றுமையின் கீர்த்தனைகள் பாடப்படுகின்றன, விண்ணுலக வலிமையின் பதாகைகள் காற்றில் அசைகின்றன.  தேவைதைப்போன்ற குரல் எழுப்பப்பட்டு, அது, பெருங்கடல் விலங்கின் கர்ஜனையைப்போன்று, சுயநலமின்மை, நிலையற்றத் தன்மை ஆகியவற்றுக்கான அழைப்பொலியை எழுப்பியுள்ளது.  யா பஹாவுல்-அப்ஹா எனும் வெற்றிக்குரல் எல்லாத் திசைகளிலிருந்தும் எதிரொலிக்கின்றன; யா அளியுள்-அலா எனும் அழைப்புக் குரல் எல்லாப் பிரதேசங்களிலும் ஒலிக்கின்றது. இதயங்களை கவருகின்ற ஒருவரின் பேரொளியைத் தவிர இவ்வுலகில் வேறெந்த பரபரப்பும் இல்லை; நிகரற்றவரும், நல்லன்பருமாகிய அவருக்காப்க பொங்கி எழுகின்ற  அன்பைத் தவிர வேறெந்த கழகமும் இல்லை. 

ஆண்டவனின் அன்புக்குரியவர்கள், தங்கள் கஸ்தூரி மணம் கமழும் சுவாசத்தோடும், எல்லா வெப்ப சூழல்களிலும், பிரகாசமான மெழுகுவத்திகளைப் போல எரிகின்றனர்; சகல இரக்கமுடையவரின் அன்பர்கள், இதழ் விரியும் மலர்களைப் போல, எல்லாத் தேசங்களிலும் காணப்படுகின்றனர். ஒரு கணநேரமும் அவர்கள் ஓய்வெடுத்ததில்லை; உம்மை  நினைப்பதில் அல்லாது அவர்கள் சுவாசிப்பதில்லை; உமது  சமயத்திற்குச் சேவையாற்றுவதைத் தவிர அவர்கள் வேறெதற்கும் யாசித்ததில்லை.  

உண்மை எனும் புல்வெளியில் அவர்கள் இனிய கீதம் பாடிடும் இராப்பாடிகள் ஆவர்; வழிகாட்டல் எனும் பூங்காவில் அவர்கள் பிரகாசமான வர்ணங்கள் கொண்ட மலர்களைப்போல் ஆவர். மெய்ம்மை எனும் இறைப்பூங்காவின் நடைப்-பாதைகளை அவர்கள் மர்ம மலர்களைக் கொண்டு அலங்கரித்துள்ளனர்; அசையும் ஊசி இலை மரங்களைப்போல் அவர்கள் தெய்வீக விருப்பம் எனும் நதிக்கரைகளில் வரிசையாக நிற்கின்றனர்.  உயிருரு எனும் தொடுவானத்தின் மேல் அவர்கள் பிரகாசமான நட்சத்திரங்களாக ஒளிவீசுகின்றனர்; உலகின் வானத்தின் மீது அவர்கள் ஜொலிக்கும் மண்டலங்களாக ஒளிர்கின்றனர்.  அவர்கள் விண்ணுலகக்  கிருபையின் அவதாரங்கள் ஆவர்; தெய்வீக உதவி எனும் ஒளியின் பகலூற்றுகள் ஆவர்.

அன்பான பிரபுவே, அனைவரும் திடமாகவும் உறுதியாகவும் இருப்பதற்கும், நித்திய பேரொளியால் பிரகாசிக்கவும் அவர்களுக்கு அருள்புரிவீராக. அதனால், ஒவ்வொரு சுவாசித்தலிலும், உமது அன்புக் கருணை எனும் உறைவிடத்திலிருந்து மென்மையான இளங்-காற்றுகள் வீசிடக் கூடுமாக; அதனால் உமது  கிருபை எனும் சமுத்திரத்திலிருந்து  ஒரு மூடுபனி தோன்றிடக்கூடுமாக;  உமது அன்பென்னும் கனிவான  சாரல்கள் பசுமையை வழங்கக்  கூடுமாக; தெய்வீக  ஒற்றுமை  எனும்  ரோஜா   தோட்டத்-திலிருந்து மென் காற்று அதன் நறுமணத்தை மிதந்துச் செல்லச் செய்யட்டுமாக.  

உலகின் அதி நேசரே, உந்தன்  பேரொளியிளிருந்து ஒளிக்கதிர் ஒன்றைத் தந்தருல்வீராக. மனுக்குலத்தின்  நன்நேேசரே,  உமது திரு- வதனத்தின் ஒளியை எங்கள் மீது பொழிந்திடுவீராக.

சர்வ வல்லமை பொருந்திய இறைவனே, எங்களைப் பாதுகாத்து எங்களின் புகலிடமாக ஆகிடுவீராக; உமது வலிமையையும் அரசாட்சியையும் வெளிப்படுத்திடுவீராக.

அன்பான பிரபுவே, தேச துரோகம் இழைத்திடுவோர் சில மாநிலங்களில் இயங்கியும் செயல்பட்டும் வருகின்றனர்; அல்லும் பகலும் அவர்கள் கொடியதோர் தவறை விளைவிக்கின்றனர்.

ஓநாய்களைப் போல, தாக்குவதற்காகக் கொடுங்கோலர்கள் பதுங்கி நிற்கின்றனர்; தவறிழைக்கப்பட்ட, குற்றமற்ற மந்தைகளுக்கு ஆதரவோ, அடைக்கலாமோ இல்லை. தெய்வீக ஒற்றுமை எனும் புல்வெளிகளில் உள்ள மான்களை வேட்டை நாய்கள் பின்தொடர்கின்றன; விண்ணுலக வழிகாட்டல் எனும் மலைகளின் மீதுள்ள வண்ணக் கோழிகளைப் பொறாமை எனும் காகங்கள்  துரத்துகின்றன.

தெய்வீக பாதுகாப்பளிப்பவரே, எங்களைப் பேணிகாத்து பாதுகாப்பீராக! எங்கள் கேடயமானவரே, எங்களை காப்பாற்றி, எங்களைத் தற்காப்பீராக! உமது உறைவிடத்தின் கீழ் எங்களை வைப்பீராக; உமது உதவியைக் கொண்டு எல்லா நோய்களிலிருந்தும் எங்களைக் காப்பீராக. மெய்யாகவே, உண்மையானப் காப்பாளரும், கண்ணுக்குப் புலப்படா பாதுகாவலரும், விண்ணுலக  காத்தருள்பவரும், அன்பான விண்ணுலகப் பிரபுவும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

